இணையத்தில் இது இலவசமாகவே கிடைக்கிறது! சி கிளீனர் மென்பொருளில் உள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் C-Cleaner

சி கிளீனர் மென்பொருளில் உள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் C-Cleaner

கம்ப்யூட்டரில் உள்ள தேவையில்லாத குப்பை பைல்களை அழித்து, கம்ப்யூட்டர் வேகமாக இயங்க பயன்படும் மென்பொருளே சி கிளீனர்.
ஆகும். இணையத்தில் இது இலவசமாகவே கிடைக்கிறது!

இந்த சிகிளீனர் மென்பொருளில்பலவசதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வசதியையும் நாம்சரியாக பயன்படுத்தினால் நம் கம்ப்யூட்டர் சூப்பர் ஃபாஸ்டாக மாறிவிடும். இணையத்தில் இது இலவசமாகவே கிடைக்கிறது!

 C Cleaner பயன்படுத்தும் பொழுது நாம் முதலில் Analyze பட்டனை பயன்படுத்த வேண்டும். இந்த பட்டனை அழுத்தினால், ஓர் அறிக்கை கிடைக்கும். அதில் அழிக்கப்பட வேண்டிய கோப்புகள் பட்டியிலிடப்பட்டிருக்கும். அந்த பட்டியலில் ஏதேனும் அழிக்க கூடாத பைல் இருந்தால் அவற்றை மற்றும் டிக் செய்து, பிறகு ரன் கிளீனர் கொடுக்கலாம். இதன்மூலம் தேவையான பைல் அழிக்கப்படாமல் பாதுகாப்படும். 99.9 தேவையற்ற பைல்களையே அந்த பட்டியலில் காண்பிக்கும். இணையத்தில் இது இலவசமாகவே கிடைக்கிறது!
 Ccleaner மென்பொருளில் Registry Clean Up என்ற வசதி உண்டு. இந்த வசதியை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை Registry Backup எடுத்துக்கொள்வது நல்லது. அதற்கான ஆப்சனும் இதில் உண்டு.   ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை சுத்தம் செய்வதற்கு முன்பு இந்த ரெஜிஸ்ட்ரி பேக்அப் அவசியம். ரெஜிஸ்ட்ரியில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது நிச்சயம் இந்த ரெஜிஸ்ட்ரி பேக்அப் உங்களுக்கு உதவும். தவறாக ஏதேனும் ரெஜிஸ்ட்ரி கீக்கான வரிகளை நீங்கள் நீக்க முயற்சிக்கும்போது அது எச்சரிக்கை செய்யும். ஒருவேளை அவ்வாறு தெரியாமல் ரெஜிஸ்ரிக் கீக்களை நீக்கிவிட்டால், அது கணினியின் இயக்கத்தையே முடக்கும் ஆபத்தும் இருக்கிறது. எனவே ரெஜிஸ்ட்ரி பேக்அப் மிக மிக அவசியமான ஒன்றாகும். ரெஜிஸ்ட்ரியை பேக்அப் செய்ய இந்த மென்பொருளிலேயே வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் குக்கிகளை வைத்துக் கொள்ள(wanted cookies): C-cleaner இயக்கப்படுகையில் அனைத்து Cookies களும் அழிக்கப்படும். பல குக்கிகள் , நமக்கு இணையப் பயன்பாட்டினை விரைவாகத் தருவதற்கு அமைக்கப்படுகிறது. அதாவது ஒரு இணையதளத்தை திறப்பதற்கு வசதியாக குக்கிகள் நம்முடைய கணினியின் சேமிக்கப்பட்டிருக்கும். நமக்கு வேண்டிய இணையதளத்தின் குக்கிகளை நாம் அழிக்காமல் அப்படியே விட்டுவிட முடியும்.
C-Cleaner மென்பொருள் Google மற்றும் Yahoo தளங்கள் ஏற்படுத்தும் குக்கிகளைத் தொடுவதில்லை. மேலும் நமக்குத் தேவையான மற்ற சில தளங்களின் குக்கிகளையும் தக்க வைக்க விரும்பினால், Options டேபில் கிளிக் செய்துகொள்ளுங்கள். பிறகு Cookies பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் திறக்கும் விண்டோவின் மூலம், உங்களுக்குத் தேவையான தளத்தின் குக்கிகளை “சி கிளீனர்’ இயக்கத்திலிருந்து விலக்கி வைக்க முடியும். இதன் மூலம் முக்கியமான, பயனுள்ள குக்கிகளை “சி கிளீனர்’ இயக்கத்திலிருந்து விலக்கி வைத்துப் பயன்படுத்தலாம். “சி கிளீனர்’ தரும் மிக முக்கிய பயனுள்ள செயல்பாடு, கணினியில் பதிந்துள்ள தேவையற்ற புரோகிராம்களை (Program)நீக்குவது. சாதாரணமாக ஒரு புரோகிராமை நீக்க, கம்ப்யூட்டரில் விண்டோஸ் தரும் Windows Add/Remove Programs டூலினைப் பயன்படுத்த வேண்டும். அதே செயலினை சி-கிளீனர் மூலம் செய்ய முடியும். சி கிளீனரில் உள்ள மற்றொரு பயனுள்ள பயன்பாடு Start up Cleaning .
நம் கணினியில் Start UP தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக்கவும், முடக்கவும் அல்லது நீக்கவும் விரைவான, இலகுவான வழிகளைத் தருகிறது.Windows உள்ள வழிமுறைகளைக் காட்டிலும், இதில் உள்ள வழிமுறைகள் மிக எளிதானதாக இருக்கும்.  Startup Cleaning மேற்கொள்ள Tools டேப் சென்று Startup என்ற பட்டன் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு புரோகிராமின் முன் உள்ள enabled/disabled பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக அவற்றை செயல்படுத்தவும், செயல் முடக்கவும் செய்யலாம். இணையத்தில் இது இலவசமாகவே கிடைக்கிறது!
தேவைப்படும்போது மீண்டும் பழைய நிலைக்கே Startup Program களை கொண்டு வரலாம். தேவையற்ற Startup Program-களை நீக்கும்போது உங்கள் கணினி விரைவாக செயல்படும். தேவையற்ற புரோகிராம்களை நீக்கிவிட்டு, ஒரு முறை ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்து முடித்துவிடுங்கள். இதனால் அந்த புரோகிராமின் நீங்காத ரெஜிஸ்ட்ரி வரிகளும் நீக்கப்பட்டுவிடும். இவ்வாறு சிகிளீனரில் உள்ள பயனுள்ள வசதிகளை முழுமையாக பயன்படுத்த கற்றுக்கொண்டால், கம்ப்யூட்டர் வேகமாக செயல்படும். தேவையற்ற குப்பையான ஃபைல்களும் நீக்கப்பட்டுவிடும். இணையத்தில் இது இலவசமாகவே கிடைக்கிறது C-Cleaner